Advertisment

ஜோஹோ நிறுவனத்தில் இபிஎஸ் !

E

தென்காசியில் உள்ள  ஜோஹோ கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சென்றிருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. நிறுவனத்தின்  ஊழியர்கள் சார்பில் இபிஎஸ்சுக்கு  சிறப்பான வரவேற்பளித்தனர்.  அவர்களிடம் பேசிய இபிஎஸ், "இங்கு  எத்தனை பேர் பணிபுரிகிறார்கள் ?  என்ன பணி நடக்கிறது ? என்றெல்லாம்  கேட்டு அறிந்துகொண்டார்.

Advertisment

ஜோஹோ நிறுவன மேலாளர், “2011ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தான்  இந்த நிறுவனம் 7 பேருடன் தொடங்கப்பட்டது.  இந்த.நிறுவனத்தில் இப்போது சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். கிராமப்புற இளைஞர்கள் வேலை தேடி நகரத்திற்குச் செல்வதைத் தவிர்க்கும் வகையில், கிராமத்திற்கு இந்த நிறுவனம் வந்திருக்கிறது.கிராமத்து இளைஞர்கள் திறமையை வெளிக்கொண்டுவரும் இந்த நிறுவனத்தின் கனவு நனவாகி வருகிறதுஎன்றார். 

Advertisment

அவரிடம் இபிஎஸ், ‘’ஸ்ரீதர் வேம்பு தொடங்கியிருக்கும் இந்நிறுவனத்தை முழுமையாக சுற்றிப்பார்க்க விருப்பம் இருக்கிறது. ஆனால், எனக்காக மக்கள் அம்பாசமுத்திரத்தில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஊழியர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இந்த நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்என்று கூறிவிட்டு, அங்கிருந்து கிளம்பிச்சென்றார்.

ஒவ்வொரு மாவட்டத்துக்குச் செல்லும் போதும்,அந்த மாவட்டத்திலுள்ள சிறப்பான இடங்களுக்கு விசிட் அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

admk zoho eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe