ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (30.11.2025) ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அர்ஜூனன் (வயது 43) என்ற அதிமுக தொண்டர் ஒருவர் திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனையடுத்து உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

Advertisment

அங்கு அவரை பரிசோதித்து மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இத்தகைய சூழலில் தான் அவரது மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார். அதில், “கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற எழுச்சிப்பயணப் பொதுக்கூட்டத்திற்கு வந்த கொண்டையமபாளையம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன், திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததாக வரும் செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அர்ஜுனனை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள் கிறேன். அதோடு மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுருந்தார். 

Advertisment

இந்நிலையில் அதிமுக பரப்புரை கூட்டத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த அர்ஜுனனின் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி இன்று (01.12.205) அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வந்திருந்து பங்கு பெற்றார்கள். இதில் அர்ஜுனன் என்பவர் சாலையில் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாக அவர் நின்று கொண்டிருந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக வந்திருந்தார். அவர் திடீர் என்று மயக்கமுற்று சாலையிலே விழுந்தவுடன் உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மூலம் 108 ஆம்புலன்ஸக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

ed-eps-camp

அதன்படி அவர் மருத்துவமனையில சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்ற சூழ்நிலையில் அவர் வருகின்ற வழியிலே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்திருந்தனர். இது மிக துயரமான சம்பவம். இவர் ஏற்கனவே பல ஆண்டுகளாக அதிமுக உறுப்பினராக இருந்து வருகின்றார். அர்ஜுனனின் சொந்த ஊர் கொண்டையம்பளையம். அவர் தூக்கநாயக்கம்பாளையம் ஒன்றியத்தை சேர்ந்தவர். அவருடைய இறப்பு உண்மையிலே எங்களுக்கு மிகுந்த வேதனையும், வருத்தத்தையும் அளிக்கின்றது. அவருடைய குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு ஆறுதல் கூறிக்கின்றோம்.

Advertisment

தாயாரைச் சந்தித்து அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளோம். உயிரிழந்த அர்ஜுனன் உடலுக்கு மரியாதை செலுத்துகின்ற விதமாக மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி உள்ளோம். அவரை இழந்து வாடும் ஒரு குடும்பத்தாருக்கும், தாயாருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். தாயாருக்கு மாவட்ட அதிமுக சார்பாக 10 லட்சம் ரூபாய் வழங்கி இருக்கின்றோம். தலைமை கழகத்தின் சார்பாக 10 லட்சம் ரூபாய் வழங்க இருக்கின்றோம். மொத்தம் 20 லட்சம் ரூபாய் அவர் குடும்பத்திற்கு நிதி உதவியாக அதிமுக சார்பாக வழங்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்” எனப் பேசினார்.