சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அமலாக்கத்துறையினர் இன்று (19.11.2025) காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்ற முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us