Enforcement Directorate raids two locations in Chennai Photograph: (raid)
கடந்த சில நாட்களாகவே சென்னையில் பல்வேறு தொழிலதிபர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டிலும், தங்க நகைக்கடை உரிமையாளர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சைதாப்பேட்டையில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் ராமகிருஷ்ணாரெட்டி வீட்டிலும், அதேபோல சௌகார்பேட்டையில் நகைக்கடை வைத்திருக்கும் மோகன்லால் காத்ரியின் புரசைவாக்கம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.