Enforcement Directorate raids house of doctor of famous hospital for illegal complaint
வேலூரில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் (CMC) மருத்துவர்கள் தங்கும் விடுதி தோட்டப்பாளையம் பகுதியில் உள்ளது. தங்கும் விடுதியில் நேற்று காலை முதல் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் உதவியோடு 7க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து ( இன்று பிற்பகல் 3 வரை) சுமார் 31 மணி நேரத்திற்கு மேல் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மருத்துவர் பெல் கிங் என்பவரின் வங்கி பண பரிவர்த்தனையில் சட்டவிரோத பண பரிமாற்றம் இருந்ததாகவும், அது தொடர்பாக ஆய்வு செய்ய வந்த நிலையில் போதை தொடர்பான பொருட்களை கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அமலாக்கத்துறையினர், வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தால் அதை விசாரித்த வடக்கு காவல்துறையினர், இந்த வழக்கு எங்களுக்கு சம்பந்தமில்லை எனவே போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகத்திற்கு சென்று புகார் அளியுங்கள் என கூறியதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து அமலாக்கதுறையினர், காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்தனர். ஆனால், போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள், சுமார் 100 கிராமிற்கு குறைவாக கஞ்சா இருப்பதால் எங்களால் வழக்கு பதிவு செய்ய முடியாது ஒரு கிலோவுக்கு மேல் இருந்தால் தான் எங்களால் வழக்கு பதிவு செய்ய முடியும் என கூறியதாக கூறப்படுகிறது. எனவே, நீங்கள் மீண்டும் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் சென்று புகார் அளியுங்கள் என்று கூறினர். அதனால் அங்கிருந்து வந்த அமலாக்கத்துறையினர், மீண்டும் வடக்கு காவல்துறையினிடத்தில் புகார் அளித்தனர்.
அதனால் வடக்கு காவல்துறையினர் மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு துறையினர் மருத்துவர்கள் தங்கி இருக்கும் தங்கும் விடுதிக்கு வந்து அமலாக்கத் துறையினருடன் சேர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Follow Us