Advertisment

பா.சிதம்பரத்திற்கு சிக்கல்; நெருக்கடி கொடுக்க தயாராகும் அமலாக்கத்துறை!

pchidambaram

Enforcement Directorate moves to take action against P. Chidambaram

ஏர்சல் - மேக்ஸிஸ் வழக்கில்  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள அமலாக்கத்துறை முனைப்பு காட்டி வருவது அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஏர்சல் நிறுவனத்தில் மலேசியாவின் மெக்ஸிஸ் நிறுவனம் ரூ.3,560 கோடி முதலீட்டில் விதி மீறல் நடந்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் மீது ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் உள்ளன. அதாவது கடந்த 2011ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த பா.சிதம்பரம், ஏர்சல் - மேக்ஸிஸ் ஒப்பந்தத்தில் ரூ.600 கோடி வரம்பை மீறிய முதலீட்டுக்கு தவறான அனுமதி வழங்கியதாகவும், அதற்காக அவர் ரூ.1.16 கோடி சட்டவிரோதமாக பரிசாக பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மேலும், இந்த சட்டவிதிகளுக்கு புறம்பான அனுமதியின் காரணமாக அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் ஆதாயம் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Advertisment

இது தொடர்பாக அமலாக்கத்துறை பா.சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், இந்த வழக்கைத் தொடர்வதற்கு பிப்ரவரி 10ஆம் தேதி அரசு தரப்பு அனுமதி  (Prosecution Sanction Order) பெறப்பட்டதாக டெல்லி ரௌஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் பா.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள பா.சிதம்பரம் மீதுள்ள வழக்கை மீண்டும் தூசி தட்டி அமலாக்கத்துறை கையில் எடுத்திருப்பது அவருக்கு புதிய நெருக்கடியைக் கொடுத்துள்ளது. 

enforcement directorate P chidambaram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe