பொதுக்கடந்தாய்வில் தனக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கூட வளாகத்திலேயே தன் மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

ராமநாதபுரம் காமன்கோட்டை அரசுப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான பொதுக்கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதுகலை கணிதவியல் ஆசிரியர் ஒருவர் வந்திருந்தார். அப்போது தனக்கு சரியான முன்னுரிமை வழங்கப்படவில்லை என பள்ளி வளாகத்தின் திடலில் அமர்ந்து அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திடீரென அவர் கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு 'கல்வித்துறை அராஜகம் ஒழிக...  கல்வித்துறை அராஜகம் ஒழிக... எனக்கு நீதி வேண்டும்... எனக்கு நீதி வேண்டும்...' என கோஷமிட்டார்.

உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர் கையிலிருந்த பெட்ரோலை பறித்துக் கொண்டதுடன் அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினார். இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.