தமிழ்நாடு அரசின் டான்செம் நிறுவனம் மற்றும் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் கமிஷ்னர் அபின் தினேஷ் மோடக் மற்றும் துணை கமிஷ்னர் கார்த்திகேயன் தலைமையில் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைப்பெற்றது.

தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் டான்செம் நிறுவனம், உலகளாவிய வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகளை அளித்து வருகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள உரிய வேலைவாய்ப்புகளை கண்டறிந்து அவர்களுக்கு அந்த வேலை சார்ந்த பயிற்சிகளை அளித்து வேலையில் அமர்த்தும் பணியை டான்செம் நிறுவனம் சிறப்பாக செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்பயின்ற ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல் பட்டதாரிகள், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள் மற்றும் கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான முகாம் செங்கல்பட்டு மாவட்டம், கைலாஷ் கார்டனில் நடைப்பெற்றது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருக்கும் முன்னணி நிறுவனத்தின் சார்பில் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 10 கம்பெனிகள் கலந்துகொண்டு வெற்றியடைந்த52 இளைஞர்களுக்கு இன்றே வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்பட்டது.

Advertisment

முன்னதாக, காவல்துறை துணை ஆணையர்கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து, டான்செம் செயல்பாடுகள் குறித்து அதன் ஆலோசகர் ஷாநவாஸ்கான் விளக்க உரையாற்றினார். தொடர்ந்து பேசிய, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மட்டும் காவல்துறையின் பணியாக நாங்கள் கருதவில்லை. அதற்கு மேலாக, பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோரை நல்வழிப்படுத்தும் வகையில் அவ்வப்போது தேவையான இதுபோன்ற சிறப்பான நிகழ்வுகள்மூலம் விழிப்புணர்வும் செய்து வருகிறோம் என்றார்.