இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி கொண்டுவரப்பட்டுள்ளது.
இமானுவேல் சேகரனின் 68 வது நினைவு தினத்தை ஒட்டி பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 7,500 கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக நினைவிடத்திற்கு அருகே உள்ள தண்டவாளப் பகுதியில் போலீசார் கண்காணிப்பு தீவிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இன்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கின்றனர். ஏற்கனவே அங்கு வரும் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வரக்கூடாது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.