Elephant skeleton found in forest
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனச்சரகத்துக்குட்பட்ட அரவட்லா மலைப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது யானை ஒன்று உயிரிழந்து எலும்பு கூடாக இருப்பதை கண்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறை அலுவலர்கள்,மருத்துவரை வரவைத்து பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனைக்கு பிறகு இறந்த யானையின் எலும்புக்கூடுகளை வனப்பகுதியிலே தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், உயிரிழந்த யானை சுமார் ஏழு முதல் எட்டு வயது பெண் யானையாக உள்ளது. தண்ணீர் அருந்த வந்த போது தவறி விழுந்து யானை உயிரிழந்திருக்க கூடும், சுமார் ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில் இதன் உடல் பாகங்களை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். முழுவிபரம் பின்னர் தெரிய வரும் எனக் கூறினர்.
Follow Us