வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனக்கோட்டத்திற்குட்பட்ட சாரங்கள் கிராமத்தில் யானைத் தந்தத்தை வைத்து விற்பனை செய்ய முயல்வதாக பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு வந்த ரகசியத் தகவல் கிடைத்தது.  தகவலின் பேரில் விரைந்து சென்ற பேரணாம்பட்டு வனத்துறையினர் சாரங்கள் பகுதியைச் சேர்ந்த மணி (22) சின்னத்தம்பி (24) ஆறுச்சாமி (21) உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்களிடம் இரண்டு யானை தந்தம் இருப்பது தெரியவந்தது.

Advertisment

அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் அவர்கள் சாரங்கல் வனப்பகுதியில் நாயுடன் வேட்டையாடச் சென்றபோது வனப்பகுதியில் இரண்டு யானை தந்தம் இருந்ததாகவும் அதை எடுத்து வந்து பதுக்கி வைத்ததும் தெரியவந்தது. மேலும் இவர்களிடம் இருந்த யானை தந்தங்களை பறிமுதல் செய்து மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து பேரணாம்பட்டு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

கடந்த மாதம் பேரணாம்பட்டு வனப்பகுதிகளில் எலும்புக் கூடுகளுடன் 5 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது. அந்த யானைகள் தந்தங்களுக்காக கொல்லப்பட்டதா என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. யானைகள் எப்படி இறந்தது எனத் தெரியவில்லை, தந்தங்கள் எதுவும் காணாமல் போகவில்லை என அப்போது வனத்துறையினர் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.