ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 'சி' பிளாக்கில் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஐந்தாவது தளத்தில் ஏற்பட்ட தீயானது ஆறாவது தளத்திற்கும் பரவி வருவதால் குடியிருப்பில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
மயிலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு துறையினர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மிக்ஸியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளோரை பத்திரமாக மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.