பொங்கல் கொண்டாட தமிழகம் வருகிறார் மோடி.  அடுத்த மாதம் ( ஜனவரி ) தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வழக்கம் போல தமிழ்நாட்டில் கோலாகலமாகக்  கொண்டாடப்பட இருக்கும் நிலையில், வருகின்ற பொங்கல் திருவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Advertisment

வருகின்ற 2026  சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் புயல் போல் சுழன்று களத்தில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு பாஜகவும் சற்றும் சளைக்காமல் பரபரப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதே நேரத்தில் அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை குறித்தும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிவருவதாகவும், இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம்  தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறாக பாஜக தேர்தல் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பாஜக வின் மக்கள் செல்வாக்கை மற்ற கட்சிகளுக்கு தெரியப்படுத்தவும், தங்கள் கட்சித்  தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும்,  தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,   கடந்த அக்டோபர் 12-ம் நாள் முதல் "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த சுற்றுப்பயணம் வருகின்ற ஜனவரி மாதத்தில் நிறைவு பெறுகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Advertisment

அதே நேரத்தில் தஞ்சாவூர் பகுதி விவசாயிகளுடன் சேர்ந்து பிரதமர் மோடி பொங்கல் பண்டிகையை கொண்டாட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக விவசாய சங்க நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. எனவே இந்த பொங்கல் விழாவினை சிறப்பாக நடத்தவும், அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்யுமாறும் தமிழக பஜக நிர்வாகிகளுக்கு பாஜக தேசிய தலைமை அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.