தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisment

இந்தியத் தேர்தல் ஆணையம், கடந்த 6 ஆண்டுகளாகத் தேர்தலில் போட்டியிடாத தமிழகத்தைச் சேர்ந்த 22 கட்சிகளின் பதிவை முதற்கட்டமாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மேலும் 42 கட்சிகளின் பதிவை இந்தியத் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, பச்சை தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் பதிவானது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அதே சமயம் கடந்த 2 மாதங்களில்  நாடு முழுவதும் 808 கட்சிகளின் பதிவை ரத்து செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. பாஜக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. அரசியல் கட்சிகளின் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு அக்கட்சிகளைச் சேர்ந்த பலரும் தங்களது கடும் கண்டனத்தைத் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பிரபல கட்சிகளின் பதிவை ரத்து செய்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.