Election Commission invites SIR-recognized parties Photograph: (election)
வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று தொடங்குகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தினுடைய அறிவிப்பின்படி தமிழக தலைமைச் செயலகத்தில் ஆறு மணியளவில் அவசர கூட்டம் நடைபெற்றது. தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற நிலையில் இதில் தமிழகத்தின் சிறப்பு வாக்காளர் திருத்தம் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது குறித்து முடிவெடுப்பதற்காக அலுவலர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என சொல்லப்பட்டிருந்தது.
வரும் நவம்பர் நான்காம் தேதி முதல் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று விண்ணப்பங்களை கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்த நிலையில், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக ஆலோசனை நடத்த இருக்கிறது தேர்தல் ஆணையம். தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் மூலமாக இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. தலைமைச் செயலகத்தில் அர்ச்சனா பட்ட நாயக் தலைமையில் இந்த கூட்டம் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது.
திமுக கூட்டணிக் கட்சி இது குறித்து இன்று மாலை அவசர கூட்டம் நடத்தி இருக்கிறது. அதேபோல அதிமுக என்ன நிலைப்பாடு எடுக்கிறது என தெரியவில்லை. திமுக கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக முடிவெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக அதை வரவேற்கும் எனக் கருதப்படுகிறது. வாக்காளர் பட்டியலை சுத்தப்படுத்தும் நிகழ்வு என பாஜக தொடர்ந்து பார்த்து வருகிறது. எனவே இதனை பாஜக ஆதரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Follow Us