வரவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் எனத் தீவிரமாகத் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், தவெகவுக்கு விஜய் கேட்ட ‘விசில்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் 184 சின்னங்கள் பட்டியடலிடும் வேளையில், தங்களுக்கு தேவையான சின்னங்களை குறைந்தபட்சம் 5 முதல் 10 சின்னங்கள் வரை தேர்வு செய்து கட்சிகள் விண்ணப்பிக்கலாம். அந்த வகையில், கடந்தாண்டு நவம்பர் மாதத்தின் போது சட்டமன்றத் தேர்தலுக்கு பொதுச் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் மனுத் தாக்கல் செய்திருந்தது.
அதன்படி, விசில், ஆட்டோ, வெற்றி கோப்பை உள்ளிட்ட சின்னங்களை தவெக பரிந்துரை பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில், விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. தவெக போட்டியிடும் 234 தொகுதிகளிலும் பொதுச் சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்த சின்னம், வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சியான தவெக, ஆணைய விதிப்படி கணக்குகளை தாக்கல் செய்துள்ளதால் பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Follow Us