Advertisment

கூட்டணி கேட் மூடலா? பிப்.13 ல் முக்கிய முடிவு-தவெகவின் அடுத்த மூவ்

843

'Election campaign...' - Tvk's next plan Photograph: (tvk)

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணி, அதேபோல் அதிமுக-பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன.

Advertisment

சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் தவெகவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தவிர தேமுதிக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, ராமதாஸ் தரப்பு பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

ஒட்டுமொத்தமாக 234 தொகுதிகளிலும் விருப்ப மனுக்களை பெற தவெக திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ளார். வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட உள்ளது. பிப்ரவரி ஆறாம் தேதி நண்பகல் 12:00 மணி முதல் மற்ற நாட்களில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம்.

தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல சட்டமன்ற தேர்தலை எழுச்சியுடன் சந்திக்கிறோம்'' என என்.ஆனந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகிக்கப்படுவதால் தவெக கூட்டணி கதவுகளை மூடி விட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தவெகவிற்கு விசில் சின்னம் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக தேர்தல் பரப்புரைக்கு தவெக தீவிரம் காட்டி வருகிறது. வரும் பிப்.13 ஆம் தேதி சேலத்தில் பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்காக சேலம் மகுடஞ்சாவடி மற்றும் சீலநாயக்கன்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதிகோரி சேலம் தவெக நிர்வாகி பார்த்திபன் காவல் ஆணையரகத்தில் அனுமதி கோரி கடிதம் வழங்கியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.    

election campaign Salem Tamilaga Vettri Kazhagam tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe