பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டிற்கு புகழ் பெற்ற மதுரையில் முதல்நாளில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்ற நிலையில் அடுத்தநாள் பாலமேட்டிலும், அதனைத் தொடர்ந்து நேற்று அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று முடிந்தது.

Advertisment

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியின் பொழுது காளை முட்டி வீசியதில் தூக்கி எறியப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி தற்பொழுது உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. செல்வராஜ் என்பவர் காளைகளை சேகரிக்கும் பகுதியில் நின்று ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது காளை ஒன்று தூக்கி வீசியது இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் மீட்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த செல்வராஜ் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisment