Elderly man found in canal - Police investigating Photograph: (erode)
திருப்பூர் மாவட்டம் வடக்கு சேவூரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (70). கடந்த 7 ஆண்டுகளாக பக்கவாதத்தால் இடது கால், இடது கை சரியாக செயல்படாது. மேலும், அடிக்கடி சுய நினைவு இழக்கும் அவர், திடீரென மாயமாவதும், இரு நாட்கள் அல்லது அதற்கு மேலான நாட்களில் வீடு திரும்புவதும் வழக்கம்.
கடந்த 22-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற வேலுச்சாமி வீடு திரும்பாததால், வடக்கு சேவூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.அதன் பேரில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் அருகேயுள்ள பெத்தம்பாளையத்தில் கீழ்பவானி கால்வாயில் வேலுச்சாமி சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து அவரது மகன் மோகன்குமார் அளித்த புகாரின் பேரில் காஞ்சிக்கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us