நாடு முழுவதும் உள்ள தெருநாய்களை எட்டு வாரங்களில் பிடிக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

நாடு முழுவதும் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக தலைநகர் டெல்லியில் தெருநாய்கள் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரித்து வருகிறது.

தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து பல்வேறு வழிகாட்டுதல்களையும் உச்சநீதிமன்றம் வழங்கி வருகிறது. இந்நிலையில் இன்று (11/08/20250 இந்த வழக்கினுடைய விசாரணை நடைபெற்றது. டெல்லியில் அதிகரித்து வரும் தெருநாய்க் கடி சம்பவங்கள் குறித்து டெல்லி அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பி இருந்தது. தெரு நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில அரசு எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பொதுமக்கள் எந்த பயமும் இல்லாமல் தெருக்களில் நடமாடுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.

தெருநாய்கள் கடிப்பதன் மூலம் ரேபிஸ் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதை கட்டுப்படுத்துவதற்கு தெருநாய்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதனால் மட்டுமே ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை குறைக்க முடியும். டெல்லி முழுவதும் நாய் காப்பகங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

Advertisment

காப்பகங்களில் இருந்து நாய்கள் தப்பாமல் இருக்க உரிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். நாய்க்கடி குறித்து புகார் அளிக்கும் வகையில் உதவி எண்களை அடுத்து ஒரு வாரத்திற்குள் அரசு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். அவ்வாறு வரும் புகாரின் மீது நான்கு மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். டெல்லியில் இனி ஒரு தெருநாய்களை கூட பார்க்க முடியாத சூழலை உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தெரு நாய் பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய அவசர தேவை ஏற்பட்டுள்ளது. டெல்லி மட்டுமல்லாது நாடு முழுவதும் தெரு நாய்களை பிடிக்க 8 வாரங்கள் கெடு விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.