ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ள நாமக்கல் மண்டலத்தில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் முட்டை ஏற்றூமதி செய்யப்படுகிறது.
இதற்கு விலை நிர்ணயம் செய்யும் தனியார் அமைப்பான தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு சமீப நாட்களாக முட்டை கொள்முதல் விலையை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 6.25 காசுகள் நிர்ணயித்தது. இதுவே வரலாறு காணாத அதிகபட்ச விலையாக கருதப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஐந்து காசுகள் உயர்ந்து 6.30 ஆக மாற்றியுள்ளது. இந்தாண்டு இது புது உச்சமாக பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு 5.90 உச்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விலை உயர்வுக்கு காரணம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை ஒட்டி கேக்கிற்கு முட்டை தேவைப்படுவதால் முட்டையின் தேவைக்கருதி விலை அதிகரித்துள்ளதாக கோழிப்பண்ணைாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கடும் குளிர், வெளிநாடு ஏற்றுமதி அதிகரிப்பு உள்ளிட்டவைகளும் காரணங்களாக சொல்கின்றனர்.
Follow Us