தஞ்சை மாவட்டம் புதுக்காரியப்பட்டியில் நடைபெற்ற பாடலாசிரியர் சினேகனின் தந்தையின் படத்திறப்பு நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

Advertisment

நிகழ்வில் கமல்ஹாசன் பேசுகையில், ''மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கை விளக்கத்தை நீங்க சரியா சொல்லலையே என்கிறார்கள்.  சொல்லிட்டுதான் இருக்கோம். உங்களுக்கு புரிகிற மாதிரி சொல்லவில்லை. நற்றமிழில் சொல்லிவிட்டோம். கொள்கைகளை ஆங்கிலத்தில் சொல்லி இருந்தால் வேற ஒருத்தன் அள்ளி போயிருப்பான். அதனால் தமிழில் சொல்லிக்கொண்டு இருந்தோம். எங்கள் கொள்கை விளக்கம் எல்லாம் எங்க போய் சேரணுமோ அங்கே போய் செயல் வடிவமாக மாறி இருக்கிறது. அது எங்கள் கட்சியைச் சார்ந்தவர்களுக்கு தெரியும். எங்கள் கொள்கை எல்லாம் நாங்க  தேர்தலில் தோற்றாலும் செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது.

Advertisment

அது எங்கள் ஆற்றலை விட எங்கள் அறிவைக் காட்டுகிறது. இனிதான் ஆற்றலை காட்ட வேண்டிய நேரம். அன்பில் என்பது அவர் வாழ்ந்த இடம் அதனால் அவர் இங்கு வந்ததில் எனக்கு ஆச்சரியமே இல்லை. அன்பு கட்சி தாண்டியது. அண்ணாவின் மேல் எனக்கு இருக்கும் அன்பும் அப்படிப்பட்டதுதான். அவரிடம் கற்ற பிள்ளைகள் எல்லாவருக்கும் அதைப் புரிந்து கொண்ட எல்லா பிள்ளைகளுக்கும் இதே குணாதிசயம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். பதவி வரும்போது பணிவு வரவேண்டும் துணிவும் வரவேண்டும் தோழா என்று சொன்னார்கள். பணிவுக்காக துணிவை இழக்கும் சுயமரியாதை அற்றவர்கள் அல்ல எங்கள் கூட்டம். இது அன்பில் வாழ்ந்தாலும் பணிவு தெரிந்தாலும் துணிவு மறக்காத கூட்டம்.

இங்கே வந்திருப்பது ஒரு இரங்கல் கூட்டத்திற்கு அல்ல, இது ஏற்றம் காணும் கூட்டம். இரங்கல் முடிந்துவிட்டது. அவர் வாழ்ந்த நாட்களை நினைத்து பெருமிதம் கொண்டு அவரை ஏற்றி வைக்கும் கூட்டம் இந்த கூட்டம். நான் இரங்கல் கூட்டங்களுக்கு தாமதமாகதான் செல்வேன் அது தெரியும், ஏன்? காரணம், அந்த கூட்டத்தில் எல்லோரும் ஆறுதல் சொல்வார்கள். ஆனால் விம்மி விடைக்கும் அந்த சோகத்தை அடுத்த நாள் உணர்வார்கள். நான் எப்பொழுதும் ஒரு மூன்று நாள் தாமதமாக, இரண்டு நாள் தாமதமாக வீடு வெறிச்தோடி கிடக்கும் பொழுது நான் மட்டும் போவதையே பெருமையாக நினைப்பவன்.

Advertisment

எதற்காக நீங்க  திமுக கூட போய் சேர்ந்தீங்க. நீங்கதான் ரிமோட் கண்ட்ரோல் எல்லாம் தூக்கி போட்டீங்களே டெலிவிஷன் மேல. ஏன்யா நீங்க மறுபடியும் அங்க போனீங்க என்றால். அதான் சொன்னேனே விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்துக்கு உண்டு. நான் தூக்கி போட்டேன் ஆனா ரிமோட்ட வேற ஆளு தூக்கிட்டு ஓட்டிட்டான். ரிமோட் ஸ்டேட்டோட இருக்கணும். கல்வியும் அப்படியேதான் இருக்கணும். நாங்க நினைக்கிற ரிமோட்ட குடுப்போமா? எடுத்துட்டுவா திரும்ப. ஒருத்தர் மேல ஒருத்தர் அடிச்சிக்க வேண்டாம் இனிமே. எவனோ வந்து தூக்கிட்டு போயிட்டான். அப்படின்னு எடுத்த முடிவு. இந்த அலையன்ஸ் புரிஞ்சா புரிஞ்சுக்கங்க புரியலன்னா சும்மா இருங்க. ஜனநாயகம் அப்படின்னு வந்துருச்சுன்னா இந்த தொல்லைகள் எல்லாம் இருந்தே தீரும். புரிந்து கொள்க. அது வேண்டாம்னு நினைச்சா மாற்று அரசியல் என்பது பாசிசம். அது எங்களுக்கு வேண்டாம்'' என்றார்.