வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடந்த 1 வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், அறுவடை செய்த நெல்மணிகளை கொள்முதல் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், கொள்முதல் செய்த நெல்மணிகள் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 500 மூட்டைக்கு மேலாக தேங்கியுள்ளதால் புதிதாக நெல்களை கொள்முதல் செய்ய முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதன் காரணமாக ஒவ்வொரு விவசாயிகளும் தாங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை கொட்டி 10 முதல் 15 நாட்களுக்கு மேலாக கொள்முதல் நிலையங்களியே காத்திருக்கின்றனர். இந்த சூழலில், தற்போது பெய்து வரும் தொடர் மழையால் ஒவ்வொரு நெல்மணிகளும் முழைக்க தொடங்கியுள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு இழப்பை சந்தித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (22-10-25) தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக முதல் கட்டமாக தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியில் கொள்முதல் நிலையத்தில் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். அதன் பின், விவசாயிகளிடம் நேரடியாகச் சந்தித்து சாகுபடி செய்த பயிர்களின் நிலைமையை கேட்டறிந்தார். 

அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “விவசாயிகள் 15 நாட்களுக்கு மேலாக நெல்மணிகளை இங்கு கொண்டு வந்து காத்திருக்கிறார்கள். அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் இது நடந்துள்ளது. அரசு ஒரு நாளைக்கு 2000 மூட்டை வீதம் கொள்முதல் செய்து அனைத்து நெல்மணிகளையும் நேரடி நெற்கொழும்புகளில் அப்புறப்படுத்தி இருந்தால் இந்நேரம் அனைத்து நெல்மணிகளையும் கொள்முதல் செய்திருக்கலாம். அதோடு மட்டுமல்லாமல் விவசாயிகளையும் பாதுகாத்திருக்கலாம். தற்போது விவசாயிகளுக்கு தீபாவளி கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கண்ணீரோடு அவர்களுடைய வேதனையை தெரிவிக்கிறார்கள். இந்த தீபாவளி அவர்களுக்கு கண்ணீர் தீபாவளியாக ஆகியிருக்கிறது” என்று கூறினார். 

Advertisment