மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் (செப்டம்பர் 3-4) புது தில்லியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள், மத்திய நிதி இணையமைச்சர், சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

Advertisment

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கூட்டத்தில் இரண்டு அடுக்குகளாக ஜிஎஸ்டி வரி வரம்பைக் குறைக்க ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி முதல் புதிய வரிகள் அமலாகும். சாமானிய மக்களுக்கான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. டிவி, ஏசி உள்ளிட்ட பொருட்களுக்கு 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. கார்களுக்கான வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பெரிய கார்களுக்கு 40% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

டிராக்டர் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சிகரெட், பான் மசாலா, குளிர்பானங்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மோட்டார் வாகன பாகங்களுக்கும் இனி 18 சதவீதம் வரி வசூலிக்கப்படும். சோப். ஷாம்பு, டூத் பேஸ்ட் போன்ற பொருட்களுக்கு ஐந்து சதவீதம் மட்டுமே வரி வசூலிக்கப்படும். பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற பொருட்களுக்கு வரி இல்லை. நொறுக்கு தீனிகள், வெண்ணெய் போன்ற பொருட்கள் மீதான வரி பதினாறு சதவீதத்தில் இருந்த நிலையில் 12 சதவீதம் மட்டுமே வரி வசூலிக்கப்படும். தனிநபர் மருத்துவக் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி கிடையாது'' என்றார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், “ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை அதிமுக சார்பாக நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.  மாற்று சீர்த்திருத்தங்களை வழிநடத்துவதில் தொலைநோக்கு தலைமை கொண்ட பிரதமர் மோடிக்கும், எளிமையான மற்றும் வளர்ச்சி சார்ந்த ஜி.எஸ்.டி. கட்டமைப்பை உறுதி செய்ய சிறப்பாக செயல்பட்ட நிதி அமைச்சருக்கும்  பாராட்டுகள்.

Advertisment

அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரம், வேளாண் உள்ளீடுகள் மற்றும் காப்பீடு ஆகியவற்றில் இரண்டு அடுக்குகளுக்கு (5% & 18%) நிவாரணம் வழங்குவது எளிமை, நியாயம் மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்கிறது. புதிய வரி விகிதம் இணக்கத்தை எளிதாக்கும், நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும்.