செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதியில் இன்று (28.12.2025) பிரச்சாரத்தை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், “திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடியப்போகிறது. திமுக ஆட்சியை அகற்றுவதற்கு இன்னும் 3 அமாவாசைகள் தான் இருக்கின்றன. அதிமுக ஆட்சியில் 5% பணிகள் தான் நிறைவேற்றப்பட்டதாம். முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசிய கள்ளக்குறிச்சியே அதிமுக ஆட்சியில் தான் உதயமானது. அதிமுக ஆட்சியில் 5% அல்ல, 95% வாக்குறுதிகள் நிறைவேற்றியிருக்கிறோம். ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததில் 5% மட்டுமே நிறைவேற்றியுள்ளது.
100 நாள் வேலைத்திட்டம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தவறான அவதூறைப் பரப்புகிறார். திட்டம் ரத்து செய்யப்படுவதாக பச்சைப்பொய் சொல்கிறார். 125 நாளாக உயர்த்தியதை 150 நாளாக உயர்த்துவதற்கு கோரிக்கை வைத்து நிறைவேற்றுவோம். அதிமுக ஆட்சி அமைந்ததும், ஒரு அரசு எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக செயல்படும். அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் 5 ஆயிரம் கொடுங்கள் என்று சொன்னார். ஆனால் இந்த அரசு கடந்த முறை எதுவும் கொடுக்கவில்லை. இந்த கடைசி காலத்திலாவது மக்கள் மகிழ்ச்சி அடைவதற்கு பொங்கல் அன்று 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள். ஏனென்றால், இனிமேல் திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை, போவதற்கு முன்பாக கொடுத்துவிட்டுப் போங்கள்.
ரகுபதி என்று ஒருவர் இருக்கிறார். வேஷ்டியை மாற்றிக்கொண்டு சென்றவர். அதிமுக தொண்டராக உழைத்து, ஜெயலலிதாகொடுத்த அடையாளத்தை வைத்துக்கொண்டு, துரோகத்தின் வடிவமாக இருந்து, பதவி சுகம் பெற்றுக்கொண்டிருக்கும் ரகுபதி அவர்களே நாவடக்கம் தேவை. அன்றைக்கு ஒரு எட்டப்பர், இன்றைக்கு ரகுபதி. ஆண்டவன் உங்களை மன்னிக்க மாட்டார். தமிழ்நாட்டில் உள்ள 3 ஆயிரம் ஜல்லி கிரஷர்களை மிரட்டி பணம் பறிக்கிறார்கள். ஒரு ஏக்கர் கிரஷருக்கு 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறுகிறார்கள், உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கிறார்கள். ஒரு கிரஷருக்கு 20 லட்ச ரூபாய் என்றால் 600 கோடி ரூபாய் கொள்ளையடிக்க இந்த அரசு துணிந்துவிட்டது. இதை நாங்கள் சும்மா வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம், மக்களும் பொறுக்க மாட்டார்கள்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/28/eps-rally-2-2025-12-28-19-55-30.jpg)