Advertisment

“விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்” - தேர்தல் வாக்குறுதி குறித்து எடப்பாடி பழனிசாமி!

vjedaps

Edappadi Palaniswami on Vijay’s election promises

சர்வதேச மகளிர் தின விழா இன்று (08-03-26) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று (07-03-26) மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் போது, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண் சாதனையாளர்களுக்கு தவெக தலைவர் விஜய், சால்வை அணிவித்து புத்தகங்கள் பரிசாக கொடுத்து கை கடிகாரங்கள் அணிவித்து கெளரவித்தார்.

Advertisment

இந்த விழாவில் மகளிர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர், மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். அதாவது வெற்றிப் பயணம் திட்டத்தின் மூலம் அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், அண்ணன் சீர் திட்டம் மூலம் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம தங்கம் மற்றும் பட்டு சேலை, சிங்கப் பெண்கள் மேம்பாட்டு திட்டம் மூலம் பெண்களின் சுய உதவி குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா நிதி, காமராஜர் கல்வி உறுதி திட்டத்தின் மூலம் மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.15,000 நிதி போன்ற வாக்குறுதிகளை அறிவித்தார்.

Advertisment

மேலும், அன்னப்பூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் மூலம் ஆண்டுக்கு கட்டணமின்றி 6 கேஸ் சிலிண்டர், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேலு நாச்சியார் படை, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரித்து விரைவாக நீதி வழங்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு பெண்கள் நீதிமன்றங்கள், பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்பிற்காக ஸ்மார்ட் பேனிக் பட்டன்ஸ், பிறக்கும் குழந்தைகளை வரவேற்பதற்காக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார். விஜய் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று (08-03-26) செய்தியாளர்களைச் சந்தித்திப் பேசிய அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எடப்பாடி பழனிசாமியிடம் விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஒவ்வொரு கட்சியும் அந்த கட்சியின் சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடுவார்கள், அது மாதிரி அவரும் அறிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியும், அந்த கட்சியினுடைய நிலைப்பாட்டை கருதி தேர்தல் அறிவிப்பு வெளியிடுகிறார்கள். அது மாதிரி தான் அவரும் வெளியிட்டிருக்கிறார். இந்த கேள்வியை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்” என்று கூறினார். 

edappadi k palaniswami tvk vijay tvk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe