Advertisment

நூலிழையில் தப்பிய எடப்பாடி பழனிசாமி

a4889

Edappadi Palaniswami narrowly escapes with his life Photograph: (admk)

தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது முதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.

Advertisment

அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் ஏற்கனவே தொகுதி வாரியாக தேதிகளை திட்டமிட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் சுற்றுப்பயணத்திற்காக எடப்பாடி பழனிசாமி சென்று கொண்டிருந்தார். அவர் பயணித்த பேருந்து சென்று கொண்டிருந்த வழியில் அவரை வரவேற்கும் விதமாக சாலையில் நுழைவாயில் வளைவு போன்ற அலங்கார கட்டவுட் வரவேற்பு வைக்கப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி பயணித்த பேருந்து, கட் அவுட் பேனரை கடந்து சென்ற சில நொடிகளில் அந்த அலங்கார கட் அவுட் சரிந்து கீழே விழுந்தது. இந்த காட்சி தற்பொழுது வைரலாகி வருகின்றன. இந்த சம்பவத்தில் நூலிழையில் எடப்பாடி பழனிசாமி தப்பியுள்ளார்.

admk edappaadi palanisamy thiruvannaamalai
இதையும் படியுங்கள்
Subscribe