விரைவில் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இன்று (07-03-26) தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “ஜெயலலிதா 2011ல் தமிழகத்தினுடைய முதலமைச்சராக பொறுப்பேற்ற பொழுது கடுமையான நிதி நெருக்கடி. அதையெல்லாம் சமாளித்து சிறப்பான ஆட்சி கொடுத்தார். ஜெயலலிதா மறைந்ததுக்கு பிறகு உங்களால் கழக நிர்வாகிகளால் நான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு நான்காண்டு இரண்டு மாதம் சிறப்பான ஆட்சி கொடுத்தோம். அந்த  காலகட்டம் மிக மிக கடுமையான காலகட்டம். முதலில் ஆட்சி பொறுப்பேற்ற உடனே கடுமையான வறட்சி, குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடையாது.

Advertisment

அந்த காலகட்டத்தில் கூட கிராமத்திலிருந்து நகரம் வரை வசிக்கின்ற மக்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட தண்ணீரை தடையில்லாமல் கொடுத்தோம். சிறப்பான ஆட்சி கொடுத்தோம். இரண்டாவது டெல்டா  மாவட்டம் புயலால் புரட்டி போட்டுவிட்டது, விவசாயிகள் எல்லாம் பாதிக்கப்பட்டார்கள், விவசாய பயிர்கள்  எல்லாம் சேதமடைந்துவிட்டது. சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு நிவாரணம் கொடுத்தோம். அடுத்து கொரோனா காலத்தில் ஓராண்டு நாம் வெளியில் வர முடியவில்லை. அப்படிப்பட்ட காலகட்டத்தில் கூட சிறப்பான ஆட்சி கொடுத்தோம். இந்தியாவிலேயே அந்த கொரோனா வைரஸ் பரவலை தடுத்த முதல் மாநிலம் தமிழ்நாடு.

Advertisment

24 - 25ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு வந்த வருமானத்தை விட இப்பொழுது 1லட்சத்து 36 ஆயிரத்து கோடி இந்த அரசுக்கு கூடுதலாக வருமானம் வருது. இப்படி கூடுதலா வருமானம் வந்து கடனை வாங்கிட்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சி பொறுப்பேற்று ஐந்த ஆண்டுல் 5 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கின்ற மக்கள் மீது கடன் சுமை சுமத்தியதுதான் இந்த ஆட்சியினுடைய சாதனை வேற எந்த சாதனையும் கிடையாது. இந்த கடனெல்லாம் நீங்கள் தான் கட்ட வேண்டும். தமிழ்நாடு மக்கள் தான் இந்த கடனை கட்டியாக வேண்டும். ஒரு பக்கம் வருமானம் அதிகம், ஒரு பக்கம் கடன் வாங்கிட்டு இருக்கிறீர்கள். புதிய  திட்டம் வரவில்லை, என்ன திட்டத்தை கொண்டு வந்தீர்கள்? எந்த ஒரு புதிய திட்டத்தையும் தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுக்கவில்லை” என்று திமுகவை விமர்சித்துப் பேசினார்.