Edappadi Palaniswami calls on BJP Photograph: (admk)
2026 ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ள நிலையில் தற்போதே கூட்டணி குறித்த விவாதங்கள் தமிழக அரசியலில் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதற்கான அறிவிப்பை அதிமுக தலைமை கடந்த 28.06.2025 அன்று வெளியிட்டிருந்தது.
வெளியான அந்த அறிவிப்பில், 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்துடனான எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணம்' முதல் கட்டமாக 7.7.2025 முதல் 21.7.2025 வரை சட்டமன்றத் தொகுதி வாரியாக நடைபெறும்' என அறிவிக்கப்பட்டிருந்தது.
07.07.2025 அன்று மேட்டுப்பாளையம் கவுண்டம்பாளையம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தைத் தொடங்க உள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அதிமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.