Edappadi palaniswami announces first phase election promises on Free bus travel for men too
அதிமுகவின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 109வது பிறந்த நாளை இன்று (17-01-26) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலித்தினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் விழா, தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஒரு பொன்னான நாள். தமிழ்நாட்டின் 17வது சட்டமன்ற பேரவைக்கான பொது தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் அதிமுக சார்பில் அளிக்கப்படும் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறேன்.
வாக்குறுதி 1, மகளிர் நலன்; சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட குலவிலக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் உதவி தொகையாக ரூபாய் 2000 வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். வாக்குறுதி எண்.2, ஆண்களுக்கும் மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம். நகர பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் நகர பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
வாக்குறுதி எண்.3, அனைவருக்கும் வீடு, அம்மா இல்லம் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி காங்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அது போல், நகரப் பகுதியில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி அம்மா இல்லம் தீட்டம் மூலம் விலையில்லாமல் வழங்கப்படும். அதை போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள் அவருடைய மகன்கள் திருமணமாகி தனி குடித்தனம் செல்கின்ற போது அரசே இடம் வாங்கி அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும். வாக்குறுதி எண்.4, 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம், 150 நாட்களாக உயர்த்தப்படும். வாக்குறுதி எண்.5, ரூ.25,000 மானியத்துடன் ரூ.5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் மூலம் வாகனங்கள் வழங்கப்படும்.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, மண்டல வாரியாக பல தரப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கை மணுக்களை பெற்றுள்ளனர். இப்பணி நிறைவடைந்ததும் அதிமுக சார்பாக குழு தயாரிக்கப்பட்ட அறிக்கையை அறிவிப்புகளாக வெளியிடப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அறிவித்தார்.
Follow Us