கடந்த பிப்ரவரி 28 முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் "ஆபரேஷன் எபிக் ஃப்யூரி" என்ற பெயரில் ஈரானிய ராணுவம், அணுசக்தி மற்றும் தலைமைத்துவ தளங்களை குறிவைத்து மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடந்த உயர்மட்டத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பல உயர் இராணுவ மற்றும் அரசியல் பிரமுகர்களின் இறந்துள்ளது பரபரப்பான சூழலை மத்திய கிழக்கில் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நட்பு நாடுகளான துபாய் பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால், சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் போர் எதிரொலி காரணமாக வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்து ரூ.868.50ல் இருந்து ரூ.928.50ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.114.50 உயர்ந்து ரூ.2043.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/07/1027-2026-03-07-07-26-04.jpg)