ஈரோடு சென்ட்ரல் தியேட்டர் பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு ஜவுளி சந்தை நடக்கிறது. அதன்படி நேற்று இரவு வார சந்தை கூடியது. இந்த சந்தையில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் வந்து கடைகளை அமைத்து இருந்தனர். வருகிற 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை, அதைத்தொடர்ந்து புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜவுளி விற்பனை மும்முரமாக காணப்பட்டது. ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

Advertisment

விடிய விடிய நடந்த ஜவுளி சந்தையில் பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த ஆடைகளை வாங்கியதால் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. சில்லறை வியாபாரத்தை விட மொத்த வியாபாரம் அதிகமாக நடந்தது. ஆந்திரா,கர்நாடகாவில் இருந்து அதிகளவில் வெளிமாநில வியாபாரிகள் வந்திருந்தனர். இந்த நாள் மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறும்போது, 'பண்டிகை காலங்களில் புத்தாடைகள் விற்பனை அதிகமாக காணப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டம் வர உள்ள நிலையில் வியாபாரிகள் வந்து ஜவுளியை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். குறிப்பாக பெண்களுக்கான பேன்சி சேலைகள், சுடிதார், குர்திஸ் வகைகள் விற்பனை அதிகரித்துக் காணப்பட்டது. சில்லறை வியாபாரத்தை விட மொத்த வியாபாரம் இந்த வாரம் விறுவிறுப்பாக நடந்தது. சில்லறை வியாபாரம் 20 சதவீதம் நடைபெற்ற நிலையில் மொத்த வியாபாரம் 30 சதவீதம் வரை நடைபெற்றது. இனி வரக்கூடிய நாட்களில் வியாபாரம் சூடு பிடிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Advertisment