இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தின் டாக்கா மற்றும் பிற பகுதிகளில் இன்று  காலை (21.11.2025) 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால்   உயிர் சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் நிலநடுக்கம் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். 

Advertisment

அதன் தொடர்ச்சியாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 10.10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதாக  தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்து வீதியில் தஞ்சமடைந்தனர். 

Advertisment

இருப்பினும் நிலநடுக்கம் ஏற்பட்டது தொடர்பாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட அதிர்வுகள், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.