தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ்ப்_பெண்கள்’ என்ற தலைப்பில் திமுகவின் டெல்டா மண்டல மகளிரணி மாநாடு இன்று (26.01.2026) நடைபெற்றது. இதில் திமுகவின் இளைஞர் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், “இப்போது தேர்தல் நெருங்கி வந்துவிட்டது. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தேர்தல் வந்து விடும். தேர்தல் எப்போது வந்தாலும் ஒன்றிய பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருவார். அவ்வாறு இரண்டு நாளுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவர் என்ன பேசினார்?.
திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பேசினது யார்?. ஒன்றிய பிரதமர் மோடி. மோடி அவர்களே மைக் என்று நினைத்து நீங்கள் கண்ணாடியைப் பார்த்துப் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். 2023இல் இருந்து பாஜக ஆட்சியில் இருக்கக்கூடிய மணிப்பூரில் மிகப்பெரிய கலவரம் நடந்தது. அங்குள்ள பெண்களுக்கு நடந்த கொடுமை எல்லாம் நாடே பார்த்தது. ஏராளமான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள். அதுமட்டுமல்லாமல் பாஜக ஆட்சி சரியில்லை; சட்ட ஒழுங்கு கெட்டு போய்விட்டது என்று மணிப்பூரில் ஆட்சி கலைக்கப்பட்டு ஒரு வருடமாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கிறது.
2002ஆம் ஆண்டு, பிரதமர் மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருக்கும் போது இஸ்லாமிய மக்களுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தினார்கள் அந்த கலவரத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது பெண்கள். ஐந்து மாத கர்ப்பிணி பில்கிஸ் பானுவை சங்கி கூட்டம் பாலியல் வன்கொடுமை செய்து, குடும்பத்தையே கொலை செய்தார்கள். அந்த கொடூரமான வழக்கில், குற்றவாளிகள் பக்கம் நின்றது பாஜக அரசு. காஷ்மீரில் ஆசிபா என்ற சிறுமி, உத்தரப் பிரதேச மாநிலம் கத்ராஸ் என்ற கிராமத்தில் இருந்து ஒரு பட்டியலின சிறுமி இப்படிப் பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து சங்கிகள் கொலை செய்தார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/26/nda-alliance-2026-01-26-18-27-14.jpg)
அந்த குற்றவாளிகளுக்கு ஆதரவு குரல் கொடுத்த கேடு கெட்ட கட்சிதான் பாஜக. இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்லும் மாநிலம் என்று பார்த்தால் தமிழ்நாடு தான். அதே சமயம் இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கிற மாநிலங்கள் எது என்றால் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் இந்த 4 மாநிலங்களையும் ஆட்சி செய்து கொண்டு இருப்பது பாஜக அரசு. பெண்களுக்கு இவ்வளவு கொடுமைகளைச் செய்துவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்து பெண்களிடம் ஓட்டு கேட்கிறது வெட்கமாக இல்லையா மோடி அவர்களே என்று உங்களைப் பார்த்து தமிழ்நாட்டுப் பெண்கள் கேட்கிறார்கள். இப்படிப்பட்ட பாசிஸ்டுகள் தமிழ்நாட்டுக்குள்ள வந்தார்கள் என்றால் மகளிருக்கும் பாதுகாப்பு இருக்காது, மாநிலத்துக்கும் பாதுகாப்பு இருக்காது” எனப் பேசினார்.
Follow Us