ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (18.12.2025) நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், “பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று சொன்னால், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு தான் அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பு இருக்கிறதா?. சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறதா?. த.வெ.க. ஆட்சியில் சட்ட ஒழுங்கில் சமரசமே இருக்காது. தைரியமாக இருங்கள்.
இதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொன்னால், எல்லாவற்றையும் தப்பு தப்பாக திரித்துப் பேசி அவதூறு பரப்புகிறார்கள். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையில் சொல்லி இந்த திமுகவை காலி செய்தார்கள். ஏன் இவ்வளவு கோபத்தோடு அவர்களைத் திட்டுகிறார்கள் என நான் கூட யோசிப்பேன். அவர்கள் இருவரும் சொன்னதை நானும் திருப்பி சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி. திமுக ஒரு தீய சக்தி. த.வெ.க. ஒரு தூய சக்தி. தூய சக்தி. த.வெ.க.வுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் இடையில் தான் போட்டியே. மக்கள் விரோத சக்தி திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியான நம்மால் தான் முடியும்” எனப் பேசினார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் திமுகவை விஜய் விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “என்றைக்காவது நீங்கள் (செய்தியாளர்கள்) அவரிடம் (விஜய்) கேள்வி கேட்டு இருக்கிறீர்களா?. ஒரு முறை அவரை பேச விடுங்கள்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/18/udhay-mic1-2025-12-18-17-19-44.jpg)