தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - 2025 இன் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (14.10.2025) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரை ஆற்றினார். அதில், “தமிழ்நாடு விளையாட்டுத்துறையில் நம்பர் 1 இடத்தை அடையவேண்டும் என்றுதான். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது விளையாட்டுத் துறைக்கென்று ஒரு தனி அமைச்சகத்தை முதன் முதலாக அமைத்தார். கலைஞரின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், இன்றைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, விளையாட்டிலும் நம்பர் 1 என்ற இடத்தை அடைந்து கொண்டிருக்கின்றது. 

Advertisment

அதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு தான், இங்கே நடந்து கொண்டிருக்கக்கூடிய முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025. இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரும் விளையாட்டுப் புரட்சியை, ஒரு மாபெரும் இயக்கமாகவே மாற்றிக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியை சிறப்பாக நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இதற்காக 84 கோடி ரூபாயை ஒதுக்கி கொடுத்தார். குறிப்பாக, பரிசுத்தொகையாக 37 கோடி ரூபாயைமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒதுக்கி கொடுத்தார். அதற்கு விளையாட்டு வீரர்களின் சார்பாக, துறையின் சார்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். 

Advertisment

2023ஆம் ஆண்டு, இதே முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றார்கள். ஆனால், இன்றைக்கு 2025ஆம் ஆண்டு சுமார் 16 இலட்சம் இளைஞர்கள் நம்முடைய முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்கள். இதிலிருந்து இந்தப் போட்டிகளுக்கான வரவேற்பையும், எதிர்பார்ப்பையும், நீங்கள் புரிந்து கொள்ளலாம். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்ற நோக்கமே, தமிழ்நாடு முழுவதும் வெளியில் தெரியாமல் இருக்கக்கூடிய விளையாட்டு வீரர்களின் திறமையை வெளியே கொண்டு வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே இலட்சியம். தமிழ்நாட்டில் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களை தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு அனுப்புகின்ற ஒரு  ஏவுதளம் (launching pad) தான்,  நம்முடைய முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025” எனப் பேசினார்.