திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு இன்று (14.12.2025) நடைபெற்றது. அப்போது  அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “திராவிட முன்னேற்ற கழகம் 75 ஆண்டுகளை கடந்து 76வது ஆண்டில் நடை போட்டு கொண்டிருக்கிறது. இந்த 75 ஆண்டுகளில் திமுக தொண்டர்கள் (உடன்பிறப்புகள்) சிறைகளுக்கு போயிருக்கிறார்கள். சித்திரவதைகளை அனுபவித்திருக்கிறார்கள். 

Advertisment

ஏன் மொழிக்காக தன்னுடைய உயிரையே தியாகம் செய்து இருக்கிறார்கள். ஆனால் திமுக தொண்டர்களாக இருக்கட்டும், இளைஞரணி தம்பிகளாக இருக்கட்டும் எந்த நேரத்திலும் களத்தில் இருந்து பின்வாங்கியது கிடையாது. ஆதிக்கத்துக்கு அடிபணிந்தது நிச்சயம் கிடையாது. எந்த நேரத்திலும் சுயமரியாதையை விட்டு கொடுத்தது கிடையாது. அப்படிப்பட்ட திமுகவை இன்னைக்கு சில பேர் மிரட்டி பார்க்கிறார்கள். குறிப்பாக குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில் நமக்கெல்லாம் (திமுக) ஒரு சவால் விட்டுள்ளார்.

Advertisment

பீகாரில் நாங்கள் (பா.ஜ.க.) வெற்றி பெற்று விட்டோம். அடுத்து எங்களுடைய இலக்கு தமிழ்நாடு. அடுத்து எங்களுடைய டார்கெட் தமிழ்நாடு என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகிறார். நான், அமித்ஷாவுக்கும் அவருடைய அடிமை கூட்டத்திற்கும் சொல்கின்றேன். நீங்கள் எவ்வளவு சீண்டினாலும் எவ்வளவு மிரட்டினாலும் அதை எதிர்கொள்வதற்கு கருப்பு சிவப்பு படை, இளைஞரணி படை என்றைக்கும் களத்தில் தயாராக இருக்கும். பேரஞர் அண்ணா 1949இல்  கட்சியை ஆரம்பிக்கும் போது சொல்லிட்டுதான் ஆரம்பித்தார். 

amit-shah-mic

அவர் என்ன சொன்னார் என்றால் டெல்லியின் ஆதிக்கத்தை எதிர்க்கத்தான் நாங்கள் வருகிறோம் என்று சொல்லிவிட்டு தான் பேரறிஞர் அண்ணா கருப்பு சிவப்பு கொடியை ஏத்துனார். அன்னைக்கு ஆரம்பித்தது, இன்னைக்கு வரைக்கும் தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கான போர்க்களத்தில் திராவிட முன்னேற்ற கழகம் என்னைக்குமே முன்வரிசையில் இருந்துள்ளது. இந்த போர்களத்தில எதிரிகள் தான் மாறி மாறி வந்திருக்காங்களே தவிர திராவிட முன்னேற்ற கழகம் என்னைக்குமே அதே வலிமையோடு இன்னைக்கு இருந்திருக்கு. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே சொன்னது மாதிரி தமிழ்நாடு என்னைக்குமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான்” எனப் பேசினார்.

Advertisment