துர்கா ஸ்டாலின் எழுதிய 'அவரும் நானும்' இரண்டாம் பாகம் நூலின் வெளியீட்டு விழா (21.07.2025) திங்கள் கிழமை நடைபெறும் என நூலை வெளியிடும் 'உயிர்மை' பதிப்பகம் தெரிவித்துள்ளது.

துர்கா ஸ்டாலின் எழுதிய 'அவரும் நானும்' இரண்டாம் பாகம் நூலின் வெளியீட்டு விழா முன்னாள் முதல்வர் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவின் மறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நூலை வெளியிடும் 'உயிர்மை' பதிப்பகம் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'துர்கா ஸ்டாலின் எழுதிய 'அவரும் நானும்' இரண்டாம் பாகம் நூலின் வெளியீட்டு விழா (21.07.2025) திங்கள் கிழமை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் வரவேற்புரையாற்றுகிறார். நூலினை வெளியிடும் உயிர்மை பதிப்பகம் சார்பில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் பதிப்பாளர் உரை நிகழ்த்துகிறார். பத்திரிகையாளர் லோகநாயகி நூல் அறிமுக உரையாற்றுகிறார்.

Advertisment

பிரபல எழுத்தாளர் சிவசங்கரி நூலினை வெளியிட டாபே குழுமத்தின் தலைவர்-நிர்வாக இயக்குநர் மல்லிகா சீனிவாசன் முதல் பிரதி பெறுகிறார். இன்பன் உதயநிதி, நலன் சபரீசன் ஆகியோர் சிறப்புப் பிரதி பெறுகிறார்கள். மேனாள் நீதியரசரும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மேல்முறையீட்டு ஆணையத் தலைவருமான பவானி சுப்பராயன், கோவை சந்திராஜி.ஆர்.ஜி. நிறுவனங்களின் தலைவர் நந்தினி ரங்கசாமி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

துர்கா ஸ்டாலின் ஏற்புரை வழங்குகிறார். உயிர்மை நிர்வாக ஆசிரியர் செல்வி ராமச்சந்திரன் நன்றியுரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் கலைமாமணி 'ராஜேஷ் வைத்யாவின் வீணை இசை நிகழ்ச்சி நடைபெறும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.