வைகோ, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் முக்கியமானவர். பல முறை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் சிறப்பாகப் பணியாற்றியவர். இந்த முறை அவரது பணிக்காலம் இன்றோடு முடிவடைந்தது. இன்று அவராற்றிய உரைக்கு அவையில் பலத்த வரவேற்பு கிடைத்தது. உணர்வுப்பூர்வமான அந்த உரை அனைவரையும் கவர்ந்தது.
ஒரு பக்கம் தந்தை வைகோ இப்படியிருக்க, மகன் துரை வைகோ இன்னொரு புறம் பம்பரமாக சுழன்று வருகிறார். கட்சியில் நிகழ்ந்த சமீபத்திய சர்ச்சைகளை கண்டுகொள்ளாமல் தன் பணியை கவனிக்கக் கிளம்பிய துரை வைகோவின் தினசரி ப்ரோக்ராம் அதிரடியாக இருக்கிறது.
22.07.2025 காலை 10மணி
இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.மதிமுக தலைவர் வைகோ உடன், மக்களவை உறுப்பினராக துரை வைகோ கலந்து கொள்கிறார். அங்கே, நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
22.07.2025 காலை 11 மணி
பீகாரில் தேர்தலுக்கு முன்பு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.அதில் மறுமலர்ச்சி திமுக சார்பில் துரை வைகோ பங்கேற்று ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினார்.
வனவிலங்குகளால் பெரிதும் பாதிக்கப்படும் ஆதிவாசிகள், பழங்குடியினர் மற்றும் விவசாயப் பெருங்குடி மக்களின் சார்பாக, பல்வேறு அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்ட Human Wildlife Conflict கூட்டம், புதுடெல்லியில் நடந்தது அதில் துரை வைகோ கலந்து கொண்டு பேசினார்.
23.07.2025 காலை 8 மணி
திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் முக்கிய நான்கு கோரிக்கைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குதுரை வைகோ நேரில் சென்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணனைச் சந்தித்து கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
24.07.2025 மதியம் 1:30மணி
தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தின் பொறுப்பு தலைவர். Dr. ராகேஷ் ஷர்மாவைபுதுடெல்லியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு நேரில் சென்று சந்தித்து, கோரிக்கை கடிதத்தை கொடுத்து, அதன் விளக்கத்தை எடுத்துரைத்து, அதனை விரைந்து நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டார்.
24.07.2025 மாலை 6 மணி
ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவியை புது டெல்லியில் அமைந்துள்ள இரயில் பவனில் சந்தித்து, திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் இரயில்வே தொடர்பான கோரிக்கையை துரை வைகோ அளித்தார்..