Advertisment

“உதயநிதி ஒரு நாள் ராஜேந்திர சோழனாக மாறுவார்” - திமுக விழாவில் துரைமுருகன் புகழாரம்!

duraiudhaya

Durai Murugan praised udhayanidhi stalin at DMK Knowledge Festival

திமுக கட்சி ஆரம்பித்து 75வது ஆண்டு நிறைவைடைந்ததையொட்டி அக்கட்சியின் இளைஞர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‘திமுக 75 - அறிவுத்திருவிழா’ என்ற நிகழ்வு இன்று (08-11-25) நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுகவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  

Advertisment

இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பேசியதாவது, “அண்ணா காலத்தில் இருந்து அரசியலில் சில தவறுகள் ஏற்பட்டாலும் உயிர் கொள்ளியாக இந்தி எதிர்ப்பு, சுயமரியாதை இவையை நான் என்றைக்கும் விட்டு கொடுத்ததில்லை. இந்த இயக்கத்தை ஆரம்பித்து 67இல் ஆட்சி பிடித்து அதை கலைஞர் கையில் ஒப்படைத்து போனார். கலைஞர் மிக வேகமாக,  அற்புதமாக  இந்த நாட்டை ஆண்டார், இயக்கத்தை கட்டி காத்தார். அந்த தலைவரும் மறைகிற பொழுது மு.க.ஸ்டாலினை கூப்பிட்டு என் பாதையை நடு என்று  அறிவுறுத்தி அவரிடத்திலே முதலமைச்சரும்  அதேபோல் கழக தலைவர் ஒப்படைத்திருக்கிறார் . என்னை பொறுத்தவரையில் நீண்ட நெடுங்காலம்  கலைஞரோடு 50 ஆண்டுகாலமாக இருந்தவன்.  மு.க.ஸ்டாலினை நான் இளம் பிராயத்தில் இருந்து அறிந்தவன். ஆனாலும்  நானே இன்றைக்கு வியக்குகிற அளவுக்கு, போற்றுகிற  அளவுக்கு அவர்  தன்னுடைய பணியை ஆற்றுவதை பார்த்து மெத்த  பெருமைப்படுகிறேன். ஏனென்றால், அவர் கலைஞரிடம் பணியாற்றியவர் , கலைஞரிடம் கற்றவர்.  

Advertisment

அதே போன்று அடுத்து இருக்கிற நம்முடைய உதயநிதி   அந்த இடத்திற்கு நிச்சயமாக சத்தியமாக ஒரு காலத்துக்கு வருவார். அப்படி வருகிற பொழுது, இந்த மன்றத்திலே நான் தெரிவிக்கிறேன் கலைஞர் பெற்ற பேரும் புகழை விட,  ஏன் உட்கார்ந்திருக்கிற முதல்வர் பெற்ற பேரும் புகழை விட, அதிகமான பேரும்  புகழையும் பெறக்கூடியவர் என்னுடைய தம்பி உதயநதி . நான் என்ன ஜோசியக்காரனா இல்லை,  இந்த வார்த்தையை  ஒரு காலத்திலே கலைஞர் என்னிடத்தில்  சொன்னார் . நான் இன்றைக்கு சொல்லவில்லை, நீண்ட காலமாக சொல்லி வருகிறேன். இந்த இயக்கத்தை  அழியாமல் காக்க வேண்டும். வேற எந்த  கட்சிக்கும் இவ்வளவு எதிர்ப்பு கிடையாது.  நமக்கு மட்டும் தான் எதிர்ப்பு. தமிழை  சொன்னால் எதிர்ப்பு, தன்மானத்தை சொன்னால்  எதிர்ப்பு, சுயமரியாதை கேட்டால் எதிர்ப்பு ஆக எதை எடுத்தாலும்  நமக்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டே  இருப்பார்கள். ஆனால்,  கையிலே ஆட்சியை வைத்து நடத்தி  கொண்டிருக்கிறோம்.

ராஜராஜ சோழருக்கு பிறகு ராஜேந்திர சோழர் . ராஜராஜன் மன்னனாக இருக்கும் போது அந்த பணியை ராஜேந்திர சோழன் ஏற்றுக்கொண்டார்.  ஆனால் ராஜராஜனுக்கு , காந்தாலூர் சாலை வரையே  சாலை ஆராட்சி இருந்தது. ஆனால் அவருடைய மகன்  ராஜேந்திரன்,  பர்மாவரி தாயி வரையிலே தன் ஆட்சியை  நிறுவி காட்டியவன் . இன்றைக்கு எழுதி வைத்து கொள்ளுங்கள்,  உதயநிதி ஒரு நாள்  ராஜேந்திர சோழனாக மாறுவார் என்பதை  என்னுடைய அரசியல் கணக்கு.   கிட்டத்தட்ட  நான் 60 ஆண்டிலிருந்து கலைஞர்  குடும்பத்தோடு பற்று பழகிறவர். எனவே எனக்கு  இப்போது இருப்பதெல்லாம் இந்த கட்சியை தாங்க  கூடியவர்கள் யார் யார் இருப்பது என்ற  எண்ணம் தான். அதை கணக்கு போட்டு அவர்  செய்கிற பொழுது பாராட்ட கூடியதாக  அமைந்திருக்கிறது. எதை செய்தாலும் உதயநிதி,  சரியாக செய்கிறார். இனி இந்த இயக்கத்திற்கு அழிவில்லை.

எனக்கு இந்த இயக்கத்தை தவிர வேறு இயக்கம் தெரியாது. நான் இன்னும் சொல்லப்போனால் சாலையில் நடக்கிற பொழுது மற்றவர்கள் கூடி வருந்தால் அந்த  நிழல் என் மேல்படாமல் ஒதுங்கி போகிறவன்.  என்னை கலைஞர் அப்படிதான் வளர்த்தார். ஆகவே அந்த  குடும்பமும் என்னுடைய குடும்பம் போல்  இருந்தது.  நான் இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். நான் எம்எல்ஏவாக,  அமைச்சராக கழகத்தின் பொதுச் செயலாளராக  இருக்கிறேன் என்றால் அதற்கு பிள்ளையார்  சுழி போட்டவர் நம்முடைய தயாளு அம்மாள் தான் என்பதை நான் பெருமிதத்தோடு  இந்த கூட்டத்தில் சொல்கிறேன். அப்படி பல பேர்  வளர்த்த குடும்பம். அந்த  குடும்பத்தினுடைய இழந்தையாக வந்திருக்கிற  நம்முடைய உதயநிதி,  இனிமேல் கட்சியை பார்த்து கொள்ள வேண்டிய  நிலை வந்திருக்கிறது. இன்றைக்கு கருப்பு சிவப்பு  சொல்கிறார், தமிழ்நாட்டின் தேசிய சின்னம் அதுதான் ” என்று கூறினார்

Udhayanidhi Stalin duraimurugan :Durai Murugan dmk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe