வேலூர் காட்பாடி பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், காட்பாடி தொகுதியின் எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான துரைமுருகன் சட்டமன்றத்தில் கலாய்த்த நிகழ்வு குறித்து பேசியிருந்தார். இது நிகழ்ச்சியில் இருந்தவர்களித்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
உதயநிதி பேசியதாவது, “நான் எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சராக இருந்த போது சட்டமன்றத்தில் துரை முருகனுக்கு பின்னாடி சீட் தான். அதன் பிறகு முதலமைச்சர் எனக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கும் போது எல்லாரும் வாழ்த்துனாங்க. ஆனால் கட்சியின் பொதுச் செயலாளர் வாழ்த்தோடு ‘இனிமே நீ என் பக்கத்து சீட்டுதான, வா வா பாத்துக்குறேன்னு’ சொன்னார்.
நான் துணை முதலமைச்சராக பொறுப்பேற்று கிட்டதட்ட ஒன்பது மாதங்கள் ஆகிறது. சட்டமன்றம் கூடும் போதெல்லாம் துரை முருகன் பக்கத்தில் தான் உட்காரணும். அதுல கடந்த மூன்று மாதமாக இந்த திருமணத்துக்காக தேதி வாங்கி தொடர்ச்சியாக நியாபகப்படுத்திட்டு வந்தார். அவருக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.