கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 உயிரிழந்த சம்பவம் நாட்டையே உளுக்கியது. அதன் பிறகு ஒரு மாதம் வரை, இருக்கும் இடம் தெரியாமல் இருந்தனர் த.வெ.க தலைவர்கள் உள்பட நிர்வாகிகள். இத்தனை பெரிய துயர சம்பவம் நடந்துவிட்ட பிறகு எந்த இடத்திலும் கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படவில்லை. துக்கம் என்றால் என்ன என்பது போலவே இருந்துவிட்டனர். இந்த நிலையில், தான் சரியாக ஒரு மாதம் முடியும் நிலையில் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் மரபை மீறிய செயலாக குடும்பத்தினரை இழந்து சோகத்தில் இருப்பவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறாத தவெக தலைவர், சோகத்தில் இருப்பவர்களை நேரில் வர வைத்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு ஆறுதல் கூறியது மேலும் பரபரப்பானது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/01/tvk2-2025-11-01-19-35-37.jpg)
இந்த நிலையில் தான் இன்று (01-11-25) காலை தவெக புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பர்வேஸ் தலைமையில் ரோடு ஷோ நடத்தினர். பர்வேஸ் சைக்கிளில் வர, அவரைத் தொடர்ந்து சாலையை மறித்து 50 பைக்குகள், 2 கார்களில் புதுக்கோட்டை நகரில் திருவப்பூரில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காளை சிலை, பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை வழியாக கீழராஜா வீதி வழியாக ரோடு ஷோ நடத்தினர். அதன் பின்னர், சாலையோர கடைகளுக்கு தவெக கட்சிக் கலரில் குடைகள் வழங்கி படங்கள் எடுத்துக் கொண்டு சென்றனர். த.வெ.க நிர்வாகிகளின் ரோடு ஷோவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நின்று நின்று சென்றது.
அதிக போக்குவரத்து உள்ள கீழராஜ வீதியில் பொதுமக்கள் ரொம்பவே பாதிக்கப்படுவதைப் பார்த்த பிருந்தாவனத்தில் பணியில் இருந்த போலீசார் குறைவாக இருந்ததால், கார்கள் பைக்குகளை நிறுத்த சொல்லியும் நிறுத்தாமல் சென்று எல்.ஐ.சி வரை சென்று மீண்டும் கீழ 2 ம் வீதிக்கு சென்று வந்தனர். போலீசார் நிறுத்தியும் நிறுத்தாமல் செல்லும் தகவல் அறிந்து கணேஷ்நகர் காவல் நிலைய ஆய்வாளர் நளினி தலைமையில் 10 க்கும் மேற்பட்ட போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து அந்த வழியாக மீண்டும் வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினர். இதைப் பார்த்ததும் மாவட்டச் செயலாளார் பர்வேஸ் அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/01/tvk3-2025-11-01-19-36-18.jpg)
வாகனங்களை நிறுத்திய ஆய்வாளர் நளினி, ‘நீங்க ரோடு ஷோ நடத்துவதால போக்குவரத்து பாதிக்கப்படுது. பாருங்க எவ்வளவு வண்டிகள் நிற்கிறது’ என்று சொல்ல ‘நீங்க காரை நிறுத்தியதால் தான் போக்குவரத்து நிற்கிறது‘ என்று தவெக நிர்வாகி சரவணன் ஆய்வாளரிடம் கூறினார். அதனை தொடர்ந்து ஆய்வாளர் நளினி, ‘போலீஸ் கார்ல ஏறுங்க காரை எடுங்க காவல் நிலையத்திற்கு’ என்று காரை பறிமுதல் செய்ய முயன்ற போது ‘பொறுங்க மேடம் டிஎஸ்பி கிட்ட பேசிட்டோம் அவர் வருவார்‘ என்று மீண்டும் சரவணன் பதில் சொல்லி காரை எடுக்கவிடாமல் தடுத்தார். அப்போது அங்கு வந்த டிஎஸ்பி அப்துல் ரஹ்மானிடம், ஆய்வாளர் நடந்ததை சொன்ன போது, ‘பொறுங்கம்மா’ என்று ஆய்வாளர் பேச்சை கேட்காமலேயே சரவணன் சொல்வதை கேட்டுக் கொண்டு காரை விட கேட்ட சரவணனிடம் மேலே பேசிட்டு சொல்றேன் என்று சொல்லி மடக்கிப் பிடிக்கப்பட்ட கார்களை அனுப்பி வைத்துள்ளார். அங்கிருந்த போலீசாரோ, இப்படி விடுறதுக்கா இத்தனை கஷ்டப்பட்டு வாகனங்களை நிறுத்தினோம் என்று டிஎஸ்பி செயலை நினைத்து நொந்து கொண்டனர். மேலும், டிஎஸ்பி அப்துல் ரஹ்மான் தவெக மாவட்டச் செயலாளர் பர்வேஸின் அப்பா ஜாபர் அலியின் செல்லப்பிள்ளையாக இருந்ததால் இப்படி விசுவாசமாக நடந்துக்கிறார் என்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/01/tvk5-2025-11-01-19-36-33.jpg)
இது குறித்து தவெக மாவட்டச் செயலாலர் பர்வேஸிடம் கேட்ட போது, ‘புதுக்கோட்டை நகரில் பூ கடை, பழக்கடைகளில் நிழல் இல்லாமல் இருந்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 20 க்கும் மேற்பட்டோருக்கு குடை கொடுத்தோம். நான் சைக்கிளில் வந்தேன் மற்றவர்கள் பைக்கிள் வந்தார்கள். இடம்விட்டு தான் வந்தாங்க. போக்குவரத்து ஒன்றும் முடங்கவில்லை“ என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/01/tvk1-2025-11-01-19-34-13.jpg)