சென்னையில் மதுபோதையில் இருதரப்பு இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கிக் கொண்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கொடுங்கையூர் சின்னம்ஆண்டிமடம் பகுதியில் உள்ள கடும்பாடி மாரியம்மன் மூன்றாவது கோவில் தெருவில் இளைஞர்கள் சிலர் மதுபோதையில் கும்பலாக இருதரப்புகளாக மோதிக்கொண்டதாக தகவல் வெளியானது. இருதரப்பினரும் கம்பு, கட்டை, கற்கள் உள்ளிட்டவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் வசித்த மக்கள் பயத்தில் வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துள்ளனர்.
இருதரப்பு இளைஞர்களுக்கு இடையே நீண்ட நாட்களாகவே மோதல் போக்கு இருந்து வந்தநிலையில் தொடர்ச்சியாக இன்று மோதிக்கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது. வீடியோ காட்சியை அடிப்படையில் வைத்து ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.