Drunk man attacks school bus - three arrested Photograph: (mayiladuthurai)
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தனியார் பள்ளி வாகனத்தை, போதை இளைஞர்கள் வழிமறித்து கற்களை வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
Advertisment
மயிலாடுதுறை மாவட்டம் அரசலங்கு பகுதியில் தனியார் பள்ளி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மது போதையில் இளைஞர்கள் சிலர் சாலையிலேயே சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். பள்ளி வாகன ஓட்டுநர் வழி விடும்படி ஹாரன் ஒலி எழுப்பிய நிலையில் பள்ளி வாகனத்தை மறித்த அந்த இளைஞர்கள் திடீரென்று கல் வீசிதாக்குதல் நடத்தினர். இந்த கல்வீச்சு சம்பவத்தால் வாகனத்தின் கண்ணாடி மற்றும் வைபர்கள் உடைந்தன. இந்த தாக்குதலின் போது பேருந்தின் உள்ளே இருந்த பள்ளி மாணவர்கள் அலறித் துடித்தனர்.
Advertisment
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்த சம்பவம் குறித்து பள்ளி வாகன ஓட்டுநர் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பெருவேலியை சேர்ந்த தாமரைச்செல்வன், பூதலூரை சேர்ந்த ஆகாஷ், கபிலன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது ஆபாசமாக பேசுதல், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், மிரட்டல் விடுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் தாக்குகளில் ஈடுபட்ட மெயின் குற்றவாளியான ஆகாஷ் தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இதில் ஆகாஷ் தப்பி ஓடமுயன்ற நிலையில் தவறி விழுந்ததாக போலீசார் மாவுக்கட்டு போட்டுள்ளனர். மேலும் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, இதுபோல யாரும் செய்யக்கூடாது என்று ஆகாஷ் மன்னிப்பு கேட்ட வீடியோவையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
Follow Us