Drugged youths riot in broad daylight - more than 10 Photograph: (namakkal)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பட்டப்பகலில் இளைஞர்கள் சிலர் கும்பலாக போதையில் சாலையில் பட்டாகத்தியுடன் பொதுமக்களை தாக்கி, மிரட்டி அட்டூழியம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள பட்டணம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் புகுந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கு இருந்தவர்களை தாக்கியதோடு சாலையில் இருந்தவர்களுக்கு மிரட்டல் விட்டனர். அதேபோல் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த இளைஞர்கள் பட்டாக்கத்தியில் தாக்குவது போன்று மிரட்டியதோடு தகாத வார்த்தைகளில் பேசினார். இந்த சம்பவத்தில் போதை இளைஞர்கள் தாக்கியதில் பத்துக்கும் மேற்பட்டோர் தலையில் காயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
படுகாயம் அடைந்த சிலரை அந்த பகுதி மக்கள் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போதையில் இருந்த இளைஞர்களைப் பிடித்து அந்த பகுதி மக்கள் ராசிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் போதையில் அட்ராசிட்டி செய்தது ராசிபுரத்தைச் சேர்ந்த ரியாஸ், பாபு, அப்சுபுதீன் உள்ளிட்ட இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது.
Follow Us