Drones banned from flying in Madurai tomorrow Photograph: (madurai)
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். மாட்டுப் பொங்கல் தினமான இன்று (16-01-26) காலை மதுரை பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்றது.
இன்று நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 9 சுற்றுகளாக மொத்தம் 870 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் 461 காளைகள் அடைக்கப்பட்டுள்ளது. குலமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்ந்தெடுக்கப்பட்டு டிராக்டர் பரிசை வென்றது. குலுக்கல் முறையில் இறுதியாக அஜித் முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு கார் பரிசு வழங்கப்பட்டது. பிரபாகரனுக்கு இரண்டாவது பரிசு அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் நாளை மதுரையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வர உள்ளார். இதனை ஒட்டி மதுரையில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.
Follow Us