ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நிற்கவில்லை. அதே வேளையில், இந்தப் போரில் உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனாலும், இரு நாட்டு இடையில் நடக்கும் போர் தொடர்ச்சியாக நீடித்து வருகிறது.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வீட்டை நோக்கி உக்ரைன் ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனின் தொலைதூர ட்ரோன்கள், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நவகிரேட் மாகாணத்தில் உள்ள மாநில குடியிருப்பு வீட்டை நோக்கி நள்ளிரவு நேரத்தில் தாக்குதல் நடத்திருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டி அதற்கான காணொளியையும் வெளியிட்டுள்ளது. சரியான நேரத்தில் தாக்குதல் முறியடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்புத் துறையின் தகவல்களின்படி, நீண்ட தூரம் இயங்கும் 91 ட்ரோன்கள் மூலமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், ஆனால் ரஷ்யாவின் வான் படைகள் அனைத்தும் ட்ரோன்களை வெற்றிகரமாக தடுத்து வீழ்த்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளதாவது, ‘போரை நிறுத்துவதற்கான அமைதி பேச்சுவார்த்தையில் ரஷ்யா ஈடுபட்டாலும் உக்ரைனின் இந்த தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. இந்த தாக்குதல் முயற்சி அரசு தீவிரவாதம். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் மீது எதிர் தாக்குதல் நடத்துவோம். அதற்கான இலக்குகளை தேர்ந்தெடுத்துவிட்டோம்’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளதாவது, ‘ரஷ்யாவின் குற்றச்சாட்டு பொய்யானது, ஆதாரமற்றது. அமைதி பேச்சுவார்த்தைகளை திசை திருப்பவும், அடுத்தக்கட்ட தாக்குதலுக்கான ஒரு காரணத்தை உருவாக்குவதற்கும் ரஷ்யா இதை பயன்படுத்துகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/30/russiahouse-2025-12-30-07-41-21.jpg)