Advertisment

மணமகனுக்கு நேர்ந்த கோரம்.. மணமகள் மயக்கம்; 2 கி.மீ துரத்தி பிடித்த ட்ரோன் கேமரா!

01

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 22 வயதான சுஜால் ராம் சமுத்ரா. இவரது திருமண விழா நவம்பர் 11-ம் தேதி இரவு பட்னேரா சாலையில் உள்ள சஹில் லான் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். மேடையில் மணக்கோலத்தில் நின்றிருந்த சுஜால் ராம் சமுத்ரா, திருமணத்திற்கு வருகை தந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்றுக்கொண்டிருந்தார்.

Advertisment

அப்போது மேடைக்கு வந்த ராகோ ஜிதேந்திரா பக்ஷி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து எதிர்பாராத விதமாக மணமகன் சுஜாலைப் பலமுறை கொடூரமாகக் குத்தியுள்ளார். இந்தத் திடீர் தாக்குதல் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனிடையே தாக்குதலுக்கு காரணமான ஜிதேந்திரா பக்ஷி குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மணமகன் குத்தப்பட்டதை நேரில் பார்த்த மணமகள் மேடையிலேயே மயங்கி விழுந்தார்.

Advertisment

இந்தக் கொடூரத் தாக்குதல் அனைத்தையும் திருமணத்தைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் கேமராவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திருமண விழா நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் ட்ரோன் கேமரா ஆபரேட்டர் அங்கு நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்துகொண்டிருந்தார். அப்போது நடந்த இந்தச் சம்பவத்தைத் தனது ட்ரோன் கேமராவில் பதிவு செய்த அவர், சாதுரியமாகத் தப்பியோடிய ராகோ ஜிதேந்திரா பக்ஷியை ட்ரோன் கேமரா மூலம் பின்தொடர்ந்து படம் பிடித்துள்ளார். மேலும், மண்டபத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று ட்ரோன் ஆபரேட்டர் குற்றவாளிகளைத் தெளிவாகப் படம்பிடித்துள்ளார்.

மண்டபத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை எடுத்துக்கொண்டு ஆரஞ்ச் ஹூடி அணிந்த நபரும், அவருக்கு உதவியாகக் கருப்பு உடை அணிந்த நபரும் சேர்ந்து தப்பிச் செல்லும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இதனிடையே குத்துப்பட்ட சுஜாலை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ட்ரோன் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தப்பியோடிய நபர்களைத் தேடி வருகின்றனர்.

திருமண விழாவில் மணமகனைக் குத்திய நபரை 2 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று படம்பிடித்த ட்ரோன் ஆபரேட்டரைப் பலரும் பாராட்டி வருகின்றனர். தற்போது அந்த ட்ரோன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

marriage police Maharashtra
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe