ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, கரடி, புலி, சிறுத்தை, காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. யானைகள் ஊருக்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தன. மேலும் சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களையும் வழிமறித்து வந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடம்பூர் திம்பம் தாளவாடி பர்கூர் போன்ற மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் வனவிலங்குகள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லாததால் மீண்டும் விலங்குகள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கிவிட்டன.

Advertisment

இந்நிலையில் கடம்பூர் மலைப்பாதையில் மாக்கம் பாளையம் செல்லும் சாலையில் நேற்று இரவு கரடி ஒன்று நடந்து சென்று கொண்டிருந்தது. இதை அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சி அடைந்து தங்களது வாகனங்களை சற்று தொலைவில் நிறுத்தினர். அப்போது வாகன ஓட்டி ஒருவர் கரடி நடந்து சென்றதை தங்க செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். கடம்பூர் வனப்பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisment

பொதுவாக கரடி அடர்ந்த வனப் பகுதியில் தான் வசிக்கும் சாலையோரம் வருவது மிகவும் அரிது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது,கடம்பூர் மலைப்பகுதியில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். கடம்பூர் மலைப்பகுதியில் கரடி நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றனர்.