மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்தில் ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் மின்கம்பத்தில் மோதி நின்றது. இதனால் பயணிகள் பதற்றத்தில் இறங்கி ஓடிய சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று சின்னங்குடி பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுப்பட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. இதனால் சேதமடைந்த மின் கம்பம் விழுந்ததில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றிலுமாக உடைந்து சேதமானது.

Advertisment

பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட வலிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட விபத்து காரணமாக பேருந்தில் இருந்த பயணிகள் பதறியடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சற்று பரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.